Posts

Showing posts from March, 2022

புவியின் உள்ளமைப்பு | The configuration of the earth

Image
புவியியல் தகவல்கள்  (Geographical information) புவியின் உள்ளமைப்பு The configuration of the earth in tamil..! நோக்கங்கள் : ◆ புவியின் உள்ளமைப்பைப் பற்றி விளக்கமாக அறிதல் ◆ புவித்தட்டுக்களின் பங்கினை புரிந்து கொள்ளுதல் ◆ நிலநடுக்கம் மற்றும் எரிமலைகளின் செயல்பாடுகளைப் பற்றி அறிதல் புவியியல் அறிமுகம் : நாம் வாழும் இப்புவியானது பல்வேறு இயக்கங்களுக்கு உட்பட்டது. புவிப்பரப்பின் மேற்பகுதியில், வானளாவிய மலைகள், உயர் பீடபூமிகள், அகன்ற சமநிலங்கள், ஆழ்பள்ளத்தாக்குகள் மற்றும் பல நிலத்தோற்றங்கள் அமைந்துள்ளன. புவியின் உள்ளேயும் வெளியேயும் பல்வேறு செயல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. புவியின் உள்ளமைப்பு எவ்வாறாக இருக்கும் என்று எப்பொழுதாவது ஆச்சரியப்பட்டது உண்டா? இதைப் பற்றி விரிவாகக் காண்போம். புவியின் உள்ளமைப்பு : (The configuration of the earth) புவியின் உள்ளமைப்பினை ஓர் ஆப்பிள் பழத்தோடு ஒப்பிடலாம். புவியின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் காணலாம். புவி அதிர்வு அலைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில், புவிக்கோளம் மூன்று செறிந்த அடுக்குகளாக காணப்படுகின்ற...