புவியின் உள்ளமைப்பு | The configuration of the earth

புவியியல் தகவல்கள் 
(Geographical information)

புவியின் உள்ளமைப்பு
The configuration of the earth in tamil..!

நோக்கங்கள் :

◆ புவியின் உள்ளமைப்பைப் பற்றி விளக்கமாக அறிதல்

◆ புவித்தட்டுக்களின் பங்கினை புரிந்து கொள்ளுதல்

◆ நிலநடுக்கம் மற்றும் எரிமலைகளின் செயல்பாடுகளைப் பற்றி அறிதல்


புவியியல் அறிமுகம் :

நாம் வாழும் இப்புவியானது பல்வேறு இயக்கங்களுக்கு உட்பட்டது. புவிப்பரப்பின் மேற்பகுதியில், வானளாவிய மலைகள், உயர் பீடபூமிகள், அகன்ற சமநிலங்கள், ஆழ்பள்ளத்தாக்குகள் மற்றும் பல நிலத்தோற்றங்கள் அமைந்துள்ளன. புவியின் உள்ளேயும் வெளியேயும் பல்வேறு செயல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. புவியின் உள்ளமைப்பு எவ்வாறாக இருக்கும் என்று எப்பொழுதாவது ஆச்சரியப்பட்டது உண்டா? இதைப் பற்றி விரிவாகக் காண்போம்.


புவியின் உள்ளமைப்பு :
(The configuration of the earth)

புவியின் உள்ளமைப்பினை ஓர் ஆப்பிள் பழத்தோடு ஒப்பிடலாம். புவியின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் காணலாம்.



புவி அதிர்வு அலைகள் பற்றிய ஆய்வின் அடிப்படையில், புவிக்கோளம் மூன்று செறிந்த அடுக்குகளாக காணப்படுகின்றன, 

அவை :

1. புவி மேலோடு
2. கவசம்
3.புவிக்கரு


1.புவி மேலோடு (Crust)

புவியின் வெளிப்புற அடுக்கு மேலோடு ஆகும். இதன் சராசரி அடர்த்தி 5 முதல் 30 கிலோ மீட்டர்களாக உள்ளது. இதன் அடர்வு கண்டப்பகுதிகளில் 35 கிலோ மீட்டர்களாகவும், கடற்தளங்களில் 5 கிலோமீட்டர்களாகவும் உள்ளது. கண்டத்தின் மேலோடு அதிக பருமனாக இருந்தபோதிலும், கண்டப்பகுதிகளின் அடர்வு கடல் மேலோட்டின் மற்றும் அடர்ந்த பாறைகளின் கலவையாகும். பெரும்பாலும் கடல் மேற்பரப்பானது பசால்ட் போன்ற அடர்பாறைகளால் ஆனது.

புவிமேலோடு இரண்டு பிரத்யேக பிரிவுகளைக் கொண்டது. கண்டங்களின் மேற்பகுதி கருங்கற்பாறைகளால் ஆனது. இப்பகுதி முக்கிய கனிமக் கூறுகளான சிலிக்கா மற்றும் அலுமனியம் தாதுக்களால் ஆனது இதனையே சியால் என்று இணைத்து அழைக்கின்றோம் இதன் சராசரி அடர்த்தி 27 கி/செமீ மேலோட்டின் கீழ்ப்பகுதி அடர்ந்த பசால்ட் பாறைகளாலான ஓர் தொடர்ச்சியான பிரதேசமாகும் கடல் தரைகளாலான இப்பகுதி சிலிக்கா மற்றும் மக்னீசியத்தை மூலக்கூறுகளாக கொண்டு அமைந்ததாகும். எனவே இப்பகுதியை சிமா என்று அழைக்கிறோம். இதன் சராசரி அடர்த்தி 3.0 கி/செமீ சியாலும் சீமாவும் சேர்ந்து புவியின் மேலோட்டின் கருப்பொருளாக அமைகின்றது. சியால் அடர்த்தி குறைவானதால் சியால் கண்டங்கள் சிமா அடர்த்தியைவிடக் மிதக்கின்றன.



2.கவசம் (Mantle):

புவி மேலோட்டின் அடுத்த அடுக்கு கவசம் என அழைக்கப்படுகிறது. இது புவி மேலோட்டையும் கவசத்தையும் மோஹோரோவிசிக் என்ற எல்லை மூலம் பிரிக்கப்படுகிறது கவசமானது சுமார் 2900 கி.மீ தடிமனாக காணப்படுகிறது. கவசத்தை இரண்டாக பிரிக்கலாம் (i) மேல் கவசம் 3.4 முதல் 4.4 கி/செ.மீ அடர்த்தியில், 700 கிலோ மீட்டர் பரப்பில் உள்ளது. (i) கீழ்க்கவசம் 4.4 முதல் 5.5 கி/செ.மீ3 அடர்வில், 700 முதல் 2900 கிலோ மீட்டர் பரப்பில் உள்ளது.


புவியின் உட்பகுதி ஏன் மிகுந்த வெப்பமாக காணப்படுகிறது?


3.புவிக்கரு (Core)

புவியின் மையப்பகுதியை புவிக்கரு என குறிப்பிடுகின்றனர் இது பேரிஸ்பியர் (Barysphere) என்றும் அழைக்கப்படுகிறது. வெய்சார்ட் குட்டன்பெர்க் என்ற இடைவெளி புவிக்கருவிற்கும் கவசத்திற்கும் இடையே எல்லையாக அமைகின்றது. புவிக்கரு இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது.

அவை திரவ நிலையில், இரும்பு குழம்பாலான வெளிப்புற புவிக்கரு 2900 முதல் 5,150 கிலோமீட்டர் அளவில் பரந்துள்ளது. திடநிலையில் உள்ள நிக்கல் (Ni) மற்றும் இரும்பால் (Fe) ஆன நைஃப் (Nife) என்ற உட்புற புவிக்கரு 5,150 முதல் 6,370 கிலோ மீட்டர் அளவில் பரந்துள்ளது. இதன் அடர்த்தி 130 கிராம்/செ.மீ ஆகும்.


உங்களுக்குக் 'தெரியுமா?

★ புவியின் கொள்ளளவில் புவி மேலோடு 1%, கவசம் 84%, மீதமுள்ள 15% புவிக்கருவையும் கொண்டுள்ளது. புவியின் சுற்றளவு 6371 கிமீ ஆகும்.

★ பூமி ஒரு நீல நிறக் கோள். 71% பூமியின் பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

சூரிய குடும்பம் TNPSC, UPSC பாடக்குறிப்புகள்.! புவியியல் பாடக்குறிப்புகள்..!